search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயர்மேன் உயிரிழப்பு"

    வேடசந்தூர் பகுதியில் வெயில் கொடுமைக்கு ஓய்வு பெற்ற வயர்மேன் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவித்து வருகின்றனர்.

    வெயில் கொடுமையால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேடசந்தூர் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை (வயது80). ஓய்வு பெற்ற வயர்மேன். கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்ததுபோல் சுற்றிதிரிந்துள்ளார். திடீரென பிச்சை மாயமானார்.

    அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் வடமதுரை சாலையில் உள்ள காலி இடத்தில் பிணமாக கிடந்தார். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பிச்சை இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அய்யலூர் அருகே சங்கிலிகரடு மலை அடிவாரத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்துள்ளார். அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது அவர் பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என தெரிய வந்தது. மலைப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சுட்டெரித்த வெயிலால் மயங்கி மலைப்பகுதியிலேயே இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் கம்பத்தில் நின்று இடுப்பில் ‘பெல்ட்’ கட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்து வயர்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது35). வயர்மேனான இவர் மின்வினியோகத்தை நிறுத்தி விட்டு வேலை செய்திட ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறினார். கம்பத்தில் நின்று இடுப்பில் ‘பெல்ட்’ கட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்த சக ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து பஜார் மின்வாரிய உதவி பொறியாளர் ஈஸ்வரி, புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    ×